என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » டல்மிஸ் அஹமத்
நீங்கள் தேடியது "டல்மிஸ் அஹமத்"
பெட்ரோல் கொள்முதல் செய்வதை நிறுத்திகொண்டால் இந்தியாவுக்கு அளிக்கப்பட்டு வரும் முன்னுரிமைகளை ஈரான் நிறுத்திவிடும் என்ற தகவலை முன்னாள் இந்திய தூதர் மறுத்துள்ளார்.
ஐதராபாத்:
நாடுகளுக்கு இடையிலான நட்புறவுகள் அனைத்துமே இருதரப்பு ஆதாயங்களுக்காகவும், செய்துகொள்ளும் ஒப்பந்தங்களும் பரஸ்பர ஆதாயம் கருதியே செய்யப்படுகின்றன. இந்நிலையில், பொறுப்புள்ள ஒரு நாட்டின் தூதர், பொறுப்பற்ற முறையில் இப்படி கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். இந்தியாவுக்கு எதிராக மூர்க்கத்தனமாக ஈரான் நடந்து கொள்ளாது என ஐதராபாத் நகரில் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த டல்மிஸ் அஹமத் தெரிவித்துள்ளார். #Iranaggressiveposture #Iranaggressive
அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. இந்தியா உள்ளிட்ட நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும். ஈரானிடம் யாரும் பெட்ரோலிய கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய கூடாது என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.
இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஈரான் நாட்டு துணை தூதர் மசூத் ரிஸ்வானியன் ராஹாகி, ‘ஈரானை ஒதுக்கிவிட்டு சவுதி, ரஷியா, ஈராக் போன்ற நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய இந்தியா முடிவு செய்தால், இந்தியாவுக்கு அளித்துவரும் முன்னுரிமையை நிறுத்தி விடுவோம்’ என குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்த கருத்து இந்தியாவுக்கு விடப்பட்ட மிரட்டல் போல் அமைந்துள்ளதாக முன்னர் சவுதி அரேபியா, ஓமன் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் இந்திய தூதராக பதவி வகித்த டல்மிஸ் அஹமத் தெரிவித்துள்ளார்.
ஈரான் நாட்டு துணை தூதர் மசூத் ரிஸ்வானியன் ராஹாகியின் கருத்தை நான் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதவில்லை. இதுபோன்ற முடிவை ஒரு தூதர் எடுக்க முடியாது. இதெல்லாம், மிக உயர்மட்டத்தில் உள்ளவர்கள் எடுக்க வேண்டும்.
நாடுகளுக்கு இடையிலான நட்புறவுகள் அனைத்துமே இருதரப்பு ஆதாயங்களுக்காகவும், செய்துகொள்ளும் ஒப்பந்தங்களும் பரஸ்பர ஆதாயம் கருதியே செய்யப்படுகின்றன. இந்நிலையில், பொறுப்புள்ள ஒரு நாட்டின் தூதர், பொறுப்பற்ற முறையில் இப்படி கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். இந்தியாவுக்கு எதிராக மூர்க்கத்தனமாக ஈரான் நடந்து கொள்ளாது என ஐதராபாத் நகரில் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த டல்மிஸ் அஹமத் தெரிவித்துள்ளார். #Iranaggressiveposture #Iranaggressive
×

X